Justice, U.S. Department of

அமெரிக்க அரசின் நீதித்துறை

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் நீதித்துறை, சட்ட மா அதிபரின் (Attorney General) தலைமையில் செயல்படும் அமைச்சரவை அதிகாரம் கொண்ட துறை. அமெரிக்க அரசின் சட்டங்களை அமுல்படுத்தவும், அதற்கான நிறுவனங்களையும், விசாரணை அமைப்புகளையும் ஏற்படுத்தி நிர்வகிக்கவும், அமெரிக்க அரசின் சார்பில் வழக்காடவும், சட்ட மீறலுக்குத் தண்டனை வழங்கும் நீதி அமைப்புகளைக் கண்காணிக்கவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை வழங்குவதும் இத்துறையின் பொறுப்புக்கள். இத் துறையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு (U.S. Drug Enforcement Administration (DEA), குடிநுழைவு மற்றும் குடியுரிமைக்கான துறை (Immigration and Naturalization Service (INS), மத்திய புலனாய்வு அமைப்பு (Federal Bureau of Investigation (FBI), நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணையம் (U.S. Parole Commission), போன்ற பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

English

The cabinet-level department, established in 1870 and headed by the Attorney General, whose primary mission is to enforce all federal laws, administer the nation's law enforcement and investigation system, advise the president in legal matters, argue suits involving the U.S. government in the Supreme Court, and supervise federal penal institutions. This department includes the U.S. Drug Enforcement Administration (DEA), the U.S. Immigration and Naturalization Service (INS), the Federal Bureau of Investigation (FBI), and the U.S. Parole Commission.