juvenile
இளம் பருவம்
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கையின்படி (United Nations Convention on the Rights of the Child (UNCRC) 18 வயது நிரம்பாதவர்கள் சிறுவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் சிறார் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் சிறார் வயதை 18 ஆக நிர்ணயித்துள்ளது. குழந்தைத் தொழிலாளார் தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், பரத்தமை தடுப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களில் 14 வயதிலிருந்து 18 வயது வரையுள்ளவர்கள் சிறுவர்களெனக் குறிக்கப்பட்டிருந்தாலும், இச் சட்டங்களுக்குள் முரண்பாடு ஏற்படும் சமயம், சிறார் நீதிச் சட்டத்தின் ஷரத்தே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
English
For purposes of criminal law, a young person who has not yet attained the age at which he or she would be treated as an adult. The term is distinguished from minor, which is used to refer to legal capacity. The age differs from state to state, although the Juvenile Justice and Delinquency Prevention Act of 1974 defines a "juvenile" as one who has not yet reached age 18.