juvenile court

சிறார் நீதிமன்றம்

தமிழ் விளக்கம்

சிறார் நீதிமன்றம் என்பது பருவ வயதை அடையாத சிறுவர்கள் செய்யும் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு கூறும் நீதிமன்றங்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், புறக்கணிக்கப்ட்ட, வன்கொடுமைக்குள்ளாகும், பிறரைச் சார்ந்து வாழ்வதால் எளிதில் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகும், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் பொறுப்பற்ற நடத்தையையும் விசாரிக்க இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. குழந்தைகள் இழைத்த குற்றத்தின் தன்மை பற்றி விசாரித்தல், அவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை விதித்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கான முயற்சிகள் போன்றவற்றைத் தீர்மானிக்கவும் இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு,

English

A court of law that has jurisdiction over abused, delinquent, depen- dent, or neglected children and their parents or guardians. Generally, the court is also responsible for determining whether an alleged offense was committed by the accused juvenile and for overseeing the resulting rehabilitation or penalty process. See also Gault decision.