juvenile justice euphemisms
இளங்குற்றவாளிகளைக் கையாளுதல் என்பதற்கான மாற்றுச் சொல்
தமிழ் விளக்கம்
இளங்குற்றவாளிகளைக் கையாளுதல் என்ற சொற்பிரயோகத்திற்கு மாற்றாக, இளங்குற்றவாளிகளைக் கையாள்வதில் மென்மையான அணுகுமுறைகளைக் கையாள 'இளைஞர்களுக்கான நீதி' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக குற்றமிழைத்த பெரியவர்களைக் குறிக்கும் போது 'கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்' என்றும், இளங்குற்றவாளிகளைக் குறிக்கும் போது 'பாதுகாப்பு அல்லது சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார்' என்று குறிப்பது வழக்கம். வயது வந்த குற்றவாளிகளை 'நன்னடத்தையின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்' என்றும், இளங்குற்றவாளிகளைக் குறிக்கும் போது அதையே 'பின்னலப் பேணலில்' (after care) விடுவிக்கப்பட்டார் என்றும் குறிப்பர். வார்த்தைகளில் தென்படும் மென்மை, இளங்குற்றவாளிகளைக் கையாளும் நடைமுறையில் இல்லாததால், இதை வார்த்தை விளையாட்டு அல்லது ஏமாற்று என்று சிலர் விமர்சித்தாலும், இந்த வார்த்தைகள் சிறுவர்களை இழிவுபடுத்தாதாகையால் இச்சொற்களைப் பயன்படுத்துவது சரியே என்பது சமூகப்பணியாளர்களின் கருத்து.
English
Language used in the juvenile justice system to soften or disguise the actual nature of dealing with young offenders. For example, juveniles are not arrested but "taken into custody." They have "adjudicatory hearings" rather than trials. They are "detained" rather than jailed and placed in "youth services centers" or "reform schools" rather than prisons. Release is usually to "aftercare" rather than parole. Some social workers defend such terminology by saying it is less stigmatizing, while others say it is deceptive.