juvenile justice policy
சிறார் நீதிக்கொள்கை
தமிழ் விளக்கம்
குற்றங்களைக் கையாளும் நீதி முறையில், சிறுவர்களின் சட்ட விரோதமான செயல்களைக் கையாள்வது பற்றிய அணுகுமுறைகளைக் குறிப்பது. வயது வந்த குற்றவாளிகளைப் போல், வழக்கறிஞரை வைத்து குற்றம் சாட்டியவருக்கு எதிராக விசாரணை செய்ய வாய்ப்பளித்தல், தொடர்ந்து குற்றமிழைக்கும் கைதிகளிலிருந்து தனித்து வைக்கபடல், குறைந்த பட்ச தண்டனை, விடுதலையாகி நன்னடத்தை உறுதி செய்யப்பட்ட பிறகு தண்டனை தொடர்பான ஆவனங்களை அழித்துவிடல், தண்டனை என்பதற்குப் பதிலாகச் சிகிச்சையளித்து சீர்படுத்தல் போன்ற முயற்சிகள் சிறார் நீதி வழங்கல் முறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களாகும்.
English
A component of criminal justice policy involving guidelines and established procedures to be considered when deciding how to cope with the illegal conduct of minors. Elements of current U.S. juvenile justice policy include giving the juvenile the same legal rights to trial and counsel granted to adults, incarceration in facilities that are segregated from adult institutions, shorter sentences, clearing the record after a specified period of good behavior, and an orientation that tries to be more therapeutic than punitive. See also Gault decision.