Kaposi's sarcoma
மென்தசை கூர் அணுப்புற்று, மென்தசை கூரணுப்புற்று
தமிழ் விளக்கம்
மென்தசை கூர் அணுப்புற்று (kaposis sarcoma) என்ற ஒருவகைப் புற்றுநோய் கடந்த காலத்தில் மத்தியதரைப் பகுதியில் வாழ்ந்த யூத இனத்து முதியவர்களிடையே காணப்பட்டது. தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களையும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்குகிறது. ஊதா நிறக் கழலைகள் தோலிலும், வாயிலும், இரைப்பை, குடல், நுரையீரல் ஆகிய பகுதிகளிலும் தோன்றுவது இந்நோயின் அறிகுறிகளாகும்.. உடம்பின் மென்மையான தசைப்பகுதிகளைப் பாதிப்பதால் மென்தசை கூரணுப்புற்று என்று பெயர். இந்நோய் நிணநீர் மண்டலத்தையும் தாக்கும்.
English
A form of cancer in which tumors grow in the blood vessel walls. Symptoms include purple or brown lumpy spots appearing on the skin and mucous membranes of the mouth. The condition was once seen primarily in older men of Jewish or Mediterranean ancestry but now occurs as a major symptom of human immunodeficiency virus (HIV) infection or acquired immune deficiency syndrome (AIDS) in people of all ages and ancestry.