karma
கர்மா, வினைப்பயன், ஊழ்வினை
தமிழ் விளக்கம்
கர்மா என்பது இந்து சமயத்திலும் பிற கிழக்காசியச் சமயங்களிலும் சொல்லப்படும் கோட்பாடு. இந்து சமயத்தில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் சரியினையான எதிர்வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும், அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதைக் குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தமிழில் ”வினைப்பயன்” என்று கூறுவர். ஒருவன் எப்படி நடக்கிறானோ, அது போலவேயாகிறான் என்கிறது யஜுர் வேதம். கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்தால் நன்மை பயக்கும். மாறாகத், தீயாது செய்தால் துன்பம் பயக்கும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்துச் செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினைத் தீர்மானிக்கின்றது. தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோ அடிகளாரோ ஊழ்வினை என்ற சொல்லைக் கையாள்கிறார்.
English
The belief, originating in Eastern philosophies and religions, that one exists within a context of destiny and that one's life is understood as ultimately beyond the individual's control and determined by a series of trials through life. Thoughts and acts determine one's fate in the next life as these thoughts and acts were determined by experiences in previous lives. In this way, objects, situations, or people can emit good or bad feelings or "vibrations."