Kellogg, Paul Underwood (1879-1958)

பால் அண்டர்வுட் கெல்லாக் (1879-1958)

தமிழ் விளக்கம்

பால் அண்டர்வுட் கெல்லாக் (1879-1958) - இவர் நியூயார்க் அறக்கட்டளை சங்கம் நடத்திய கோடைகாலப் பள்ளியில் (சமூகப்பணிக் கல்வியின் முன்னோடி) சமூகப்பணி பயின்று, அந்நிறுவனத்தின் பத்திரிகையான 'தர்மசிந்தனை'யில் (Charity) ஆசிரியராகப் பணியாற்றினார். பின் அப்பத்திரிகை கருத்தாய்வு (Survey) என்று பெயர் மாற்றம் பெற்றது. கருத்தாய்வு சமூகப்பணியின் அதிகாரபூர்வமற்ற ஆனால் செல்வாக்குமிக்க தொடர்பு சாதனமாக இருந்தது. கெல்லாக், எழுத்தாளராக (பத்திரிகைப் பணி) மட்டுமல்லாது, பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

English

Founder and editor from 1909 to 1952 of The Survey, social work's unofficial and vastly influential journal. The Survey was one of the few national publications to give in-depth analyses of social problems and their solutions. Kellogg was also an active leader in the development of various social work organizations.