Keogh Plan
கியோக் திட்டம்
தமிழ் விளக்கம்
சுயதொழில் செய்பவர்களுக்கும் (சுயமாகப் பணிபுரியும் சமூகப்பணியாளர்களையும் உள்ளடக்கியது), பெருநிறுவனங்களில் பணியாற்றாதவர்களுக்கும் பயன்தரக்கூடிய ஓய்வூதிய திட்டம். இத்திட்டத்தில் சேருபவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஓய்வூதியப் பலன்களுக்காகச் செலுத்தி, தங்களுடைய 59.5 வயதிலிருந்தோ அல்லது 70 வயதிலிருந்தோ பலன்களைப் பெறலாம். இத்திட்டத்திற்கு செலுத்தும் தொகைக்கு வருமானவரி விலக்கு உண்டு. இத்திட்டம் நியூயார்க் செனட்டர் கியோக் அவர்களால் பிரேரிக்கப்பட்டதால் அவருடைய பெயரிலே அடையாளப்படுத்தப்படுகிறது.
English
A retirement pension system for self-employed people. Also known as the HR-10 plan, Keogh permits self-employed people, including social workers in private practice, to set aside a specified portion of their net earnings each year. No income taxes on these funds must be paid until retirement. Payouts begin between ages 59 1/2 and 70, at which time taxes on the income and interest are paid. The plan holder must keep the funds in a qualified financial institution (such as a bank, insurance company, or securities firm) set up for this purpose and permit all full-time employees to participate in the retirement plan. The plan holder must report Keogh activity to the Internal Revenue Service annually and cannot withdraw the funds until retirement without a financial penalty.