Kerner Commission

கெர்னெர் (விசாரணைக்) கமிஷன்

தமிழ் விளக்கம்

லின்டன் பி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் (1967), அமெரிக்காவில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்கான காரணங்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும், அதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளைக் கண்டறிந்து சொல்ல, இல்லினாஸ் மாநில கவர்னராய் இருந்த ஒட்டோ கெர்னர் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு. வெள்ளை இனத்தவரின் துவேசமும், கறுப்பின மக்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதுமே கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தது என்று இக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டது. அமெரிக்கச் சேரிகளில் வாழ்ந்த கறுப்பின மக்களின் வாழ்க்கை மேம்பாடைய இக்குழு செய்த பரிந்துரைகளில் சில நடைமுறைப்படுத்தப்பட்டது.

English

The National Advisory Commission on Civil Disorders, a fact-finding group appointed by President Lyndon B. Johnson in 1967 and headed by Governor Otto Kerner of Illinois to determine the causes of and make recommendations on solutions to the civil rights protests and riots of that period. The commission's report, issued in 1968, blamed white racism and the limited opportunities available to the African Americans who lived in ghettos. Few of its proposals were implemented.