Keynesian economics

கெயின்சியப் பொருளியல்

தமிழ் விளக்கம்

ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes -1883 – 1946) - பிரபலமான பிரித்தானியப் பொருளியலாளர். கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல் மற்றும் அரசியல் கோட்பாடுகளிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு (economic recession & boom) போன்றவற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக, நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில், அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலப் பருப்பொருளியல் (macroeconomics) கோட்பாட்டின் தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் திகழ்ந்தார்.

English

The theories of British economist John Maynard Keynes (1883-1946), including the recommendation that during economic slumps, government should increase public spending to stimulate commerce and create employment.