kibbutz
கிபுட்ஸ், சேர்ந்திருத்தல், கூடிவாழ்தல்
தமிழ் விளக்கம்
ஹீப்ரு மொழியில் கிபுட்ஸ் என்றால் சேர்ந்திருத்தல், கூடிவாழ்தல் என்று பொருள். கிபுட்ஸ் என்பது இஸ்ரேல் நாட்டில் உருவான கூடி வாழும் வேளாண்மைச் சமுதாயம். சோசலிசம் மற்றும் ஜையோனிசக் கொள்கைகளின் அடிப்படையில் உயர் இலட்சியங்களைக் கொண்ட ஒரு கூட்டு வாழ்க்கைக் குழு. இஸ்ரேலில் கிபுட்ஸ் என்கிற கூட்டுறவு சமுதாயப் பண்ணைய முறை, வெளிநாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு புலம் பெயரும் யூத இன மக்களுக்கு, நிலம் கொடுத்து, விவசாயத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து, அந்த மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதோடு, லாபப் பங்கீட்டிலும், குடும்ப அமைப்பிலும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் முறை. கிபுட்சில் தனிச் சொத்துரிமை இல்லாதது மட்டுமல்ல, ஒவ்வொருவர் உழைப்பிற்கும் ஈடாக அவருக்கு தேவையானவற்றை அச்சமூகமே செய்துதரும். இஸ்ரேல் நாட்டில் உள்ள 270 கிபுட்ஸ்கள் (2010) மூலம் 40 சதவீத வேளாண் உற்பத்தியும், 9 சதவீத தொழிலக உற்பத்தியும் நடப்பதே கிபுட்ஸ்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
English
A collective residential community in Israel. Residents own almost no personal property and work for the community not for a salary but for goods and services from other members. The needs of the residents, including food, housing, education, child care, and health care, are provided for by the combined resources of the community.