kidney dialysis

கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல், இடைச்சவ்வூடு மூலம் பிரித்தல், சிறுநீர் கலவைப் பிரிப்பு, குருதி / இரத்தச் சுத்திகரிப்பு

தமிழ் விளக்கம்

சிறுநீரகங்கள் உடல்நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சல்மேட்) உட்புறச் சமநிலையைப் பராமரிக்கின்றன. சுவாசித்தல் வழியாக வெளியேற்ற முடியாத அமில வளர்சிதை மாற்ற இறுதிப் பொருட்களை சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் கழிவுப் பொருட்களை அகற்றுவதை கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல் (dialysis) என்கிறோம். இது இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரித்தெடுக்கும் ஓர் செயல்பாடாகும். திடீரெனத் தாக்கிய சிறுநீரகக் கோளாறினால் சிறுநீர் பிரிப்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், படிப்படியாகச் செயலிழந்துவரும் நெடுநாள் சிறுநீரகக் கோளாறு (நிலை 5 அல்லது இறுதி-நிலை சிறுநீரக நோய்) காரணமாக சிறுநீர் பிரிப்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், இந்தக் கூழ்மப்பிரிப்பு சிகிட்சை வழங்கப்படுகிறது. நெடுநாள் சிறுநீரகக் கோளாறு தீவிரமடைய சில மாதங்களிலிருந்து சில வருடங்கள் கூட ஆகலாம்; ஆனால் கடிய சிறுநீரகக் கோளாறு போலன்றி இந்தச் செயலிழப்பை மீட்க முடியாது. அத்தகையோருக்கு சிறுநீரக தானம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்படும்வரை செயற்கை முறையான இந்தச் சிகிட்சை தாக்குப்பிடிக்கும் முயற்சி'யாக வழங்கப்படுகிறது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தவியலாத சில நோயாளிகளுக்கு இது ஒன்றே வாழ்வாதார சிகிட்சையாக விளங்குகிறது. கூழ்மப்பிரிப்பு, சிறுநீரகச் செயல்பாட்டிற்கான முழுமையான மாற்றுச் சிகிச்சை அல்ல. ஏனெனில் இவை சிறுநீரகத்தின் அக்கச்சுரப்பி (hormones secreted by kidneys) செயல்பாட்டைச் செய்வதில்லை. கூழ்மப்பிரிப்பு சிகிச்சைகள் ஊடுபரவல் (கழிவு நீக்கம்) மற்றும் நுண் வடிகட்டல் (திரவ நீக்கம்) மூலமாக சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் சிலவற்றை மட்டும் செய்கின்றது.

English

See hemodialysis.