Kiibler-Ross death stages
கூபார் ராசின் மரண நிலைகள்
தமிழ் விளக்கம்
மரணத்தை எதிர்கொள்ளும் நிலையிலிருப்பவர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவரின் மரணத்தை எதிர்கொள்ளும் நிலையிலிருப்பவர்களைப் பேட்டி கண்டு அவர்கள் ஐந்து நிலைகளில் துயரத்தை எதிர்கொள்வதாக கூபர் ராஸ் என்ற உளவியல் மருத்துவர் எடுத்துரைத்தார். அவையாவன் 1. மறுத்தல் நிலை - எதார்த்ததை உணர மறுத்தல் (denial and isolation), 2.ஆத்திர நிலை - எனக்கேன் இந்த நிலை ஏற்பட்டது என்று கருவுதல் (anger), 3. பேரம் பேசும் நிலை - எதையாவது செய்து இந்நிலையிலிருந்து மீளவேண்டுமென்ற உந்துதல் (bargaining), 4. மனச் சோர்வு நிலை - என்னால் என்ன செய்யமுடியும் என்ற கையறு நிலை (depression), 5. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளல் (வேறு வழி இல்லை இதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற சமாதான உணர்வு நிலை (acceptance). கூபர் ராஸின் மரணநிலைக் கோட்பாட்டில் சொல்லப்பட்ட ஐந்து வருத்த நிலைகளைப் பற்றிய விளக்கங்கள், நெருக்கடி காலங்களில் மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை அறிந்துகொள்ள உதவுகின்றது. ஆனால் எல்லோரும் இதே வரிசையில் துயரத்தை அனுபவிப்பார்கள் என்று சொல்லவியலாது. சிலர் இந்த உணர்வுகளை முன்னும் பின்னுமாக அனுபவிக்கலாம். சிலர் ஏதேனும் ஒருநிலையில் தீவிரமாக நிலைகொள்ளலாம்.
English
The psychological reactions to impending death described by Elisabeth Kithler-Ross in 1969, based on her interviews with terminally ill patients. The five stages identified are (1) denial and isolation, (2) anger, (3) bargaining, (4) depression, and (5) acceptance. Some patients go through these stages in a different order, some go back and forth between some or all of the stages, and still others never go through any of them.