kinesics

உடலசைவியல்

தமிழ் விளக்கம்

உடலசைவியல் என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு முறைகளை விளக்குவதாகும். இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவைகளைக் கொண்டு விளக்கப்படுகிறது. மனிதர்களின் தகவல்தொடர்பு 93% உடலசைவாலும், சொல்லல்லாத கூறுகளாலும், 7% சொற்களாலான கூறுகளாலும் நடப்பதாக அறியப்பட்டிருக்கின்றது. ஆல்பர்ட் மெஹ்ராபியன் என்பவர் பிறர் 'புரிந்துகொள்ளும் அர்த்தங்களில் 60 லிருந்து 70 சதவீதம் சொல்லிலா நடத்தைகளினாலேயே புரிந்துகொள்ளப்படுகின்றன' எனக் கூறுகின்றனர். உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிபுணர்த்துகிறது. முரட்டுத்தனம், விழிப்புணர்வு, சலிப்பு, தளர்வான நிலை, இன்பம், கேளிக்கை போன்றவற்றையும், கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) போன்ற உடல்மொழி, மனிதர்களின் பல்வேறு மனநிலைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே உடல் அசைவு மற்றும் அதன் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், 'சொற்களை உபயோகித்து செய்யப்படும் தகவல்தொடர்பு சிலருக்கு கடினமானதாக இருக்கும்போது, உடலசைவுகள் மன ரீதியான சிரமத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள் மூலம், அவற்றைப் பயன்படுத்தும் நபரைப் பற்றிய பல விவரங்களை தெரிந்துகொள்ள முடியலாம். எடுத்துக்காட்டாக, முகபாவங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை அல்லது செய்தியை அழுத்தமாக வெளிப்படுத்த உதவுகின்றன, உடலசைவானது ஒரு செயலிலுள்ள சலிப்பை அல்லது ஆர்வத்தை அறிந்துகொள்ள உதவலாம்.

English

Nonverbal communication through body motions. See also communication theory.