kinship care
உறவுமுறை பாதுகாப்பு
தமிழ் விளக்கம்
பெற்றோர்களைத் தவிர்த்து பிற உறவினர்களால் குழந்தைகளுக்கு முழுநேரமும் கொடுக்கப்படும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு. இது குடும்பத்திலுள்ள மூத்த உறவினராலோ, குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய பிறராலோ, அக்குழந்தையின் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாலோ, வளர்ப்புப் பெற்றோராலோ (ஞானஸ்தானப் பெற்றோர் - Godparent) தாயின் மறுகணவராலோ அல்லது தந்தையின் இரண்டாம் தாரத்தாலோ வழங்கப்படலாம். இது, ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் போதோ, பெற்றோரற்ற நிலை ஏற்படும்போதோ, அரசின் தலையீடின்றி இயல்பாக நடக்கும் செயலாகும். சிலநேரங்களில் அரசு அனுமதி மற்றும் உதவியுடன் உறவுமுறை சார்ந்தவர்களே முறையான பராமரிப்பாளர்களாக பொறுப்பேற்றுக்கொள்வதும் உண்டு.
English
The full-time nurturing and protection of children by adult relatives other than parents; these adults may have family ties or other important bonds, such as being members of their tribes or clans, godparents, or stepparents. When the child must be separated from parents, kinship care may be provided informally-that is, without state involvement-by kinship caregivers or kinship foster parents under formal arrangement with the public child welfare system. See also foster care.