knowledge base
அறிவுத் தளம்
தமிழ் விளக்கம்
ஒரு கருத்தைப் பற்றி ஒருங்கிணைக்கப்பட்ட ஞானம். சமூகப்பணியின் அறிவுத்தளம் என்பது சமூகப்பணி தொடர்பான இதுகாறும் திரட்டப்பட்ட தகவல்கள், அது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புக்கள், சமூகப்பணி வலியுறுத்தும் பண்புகள் (விழுமங்கள், கோட்பாடுகள் - values), சமூகப்பணியாளர்களின் திறன்கள், இதையெல்லாம் (அறிவு, பண்பு, திறன்கள்) பெறுவதற்கும், பயன்படுத்துவதற்கும், அதை மதிப்பிடுவதற்கும் கையாண்ட முறைகள் என்று அனைத்தும் சமூகப்பணியின் அறிவுத்தளத்தில் அடங்கும். சமூகப்பணியின் அறிவுத்தளம் என்பது சமூகப்பணியாளர்கள் முன்னெடுத்த ஆய்வுகளிலிருந்தும், கோட்பாடுகளைக் கட்டமைப்பதிலிருந்தும், ஒன்றைப்பற்றி முறையாகச் செய்யப்பட்ட கூராய்வுகளிலிருந்தும், சமூகப்பணியாளர்களின் நேரடியான பணி அனுபவத்திலிருந்தும், பிறரின் அனுபவங்களாகச் சொல்லப்பட்ட அறிக்கைகளிலிருந்தும் பெறப்படுகிறது. சமூகப்பணியின் இந்த அறிவுத்தளம், வாடிக்கையாளர்களின் அனுபவங்களிலிருந்தும், அவ்வாடிக்கையாளர்களைக் கையாளும் பிற துறை நிபுணர்களின் அனுபவத்தால் மேலும் விரிவாகி செழுமை கொள்கிறது.
English
In social work, the aggregate of accumulated information, scientific findings, values, and skills and the methodology for acquiring, using, and evaluating what is known. The knowledge base is derived from the social worker's own research, theory building, and systematic study of relevant phenomena and from the direct and reported experiences of other social work practitioners. It is also derived from information made available by clients and members of other disciplines and professions and from the general knowledge of society as a whole. Kohlberg moral development