koro
பூள் (ஆண்குறி) சுருங்கச்சம், பூள் சுருங்கி உள்வாங்கும் அச்சம்
தமிழ் விளக்கம்
பூள் சுருங்கச்சம் என்பது கிழக்காசிய நாடுகளில் காணப்படும் கலாச்சாரத் தொடர்புடைய மனக்கோளாறு. இந்த மனக்கோளாறுக்குட்பட்ட ஆண்களுக்குத் தங்கள் ஆண்குறி சுருங்கிக்கொண்டே உள்ளிழுக்கப்படுவதாகவும், அது முழுமையாக உள்ளிழுக்கப்படும்போது மரணம் சம்பவிக்குமென்றும், பெண்களுக்குத் தங்களின் மூலைக்காம்புகள் சுருங்கிக்கொண்டே வந்து உள்ளிழுக்கபட்டு, முழுமையாக உள்ளிழுக்கப்படும் போது மரணம் சம்பவிக்கும் என்ற மட்டுமீறிய பயவுணர்வு இந்தக் கோளாறின் அறிகுறிகளாகும். இந்த பயவுணர்வு வெகுஜனப் பதற்றமாக (mass hysteria) பல நாடுகளில் கடந்த காலத்தில் இருந்தததாகக் கூறப்படுகிறது.
English
A culture-bound syndrome, found especially among peoples of Chinese and East Asian ancestry, in which a man experiences intense anxiety that his penis will recede into his body or in which a woman fears her vulva and nipples will recede into her body.