Ku Klux Klan (KKK)

கு குளக்ஸ் கிளான்

தமிழ் விளக்கம்

சிறுபான்மை இனத்தவருக்கெதிரான, குறிப்பாக யூதர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி கொண்ட பிராட்டஸ்டண்டு மதச் சார்புடைய பல உதிரிக் குழுக்களின் கூட்டமைப்பு. இக்குழுக்கள் மேற்சொன்ன இனத்தவரின் மீதான காழ்ப்புணர்ச்சியை அச்சுறுத்தல் மற்றும் வன்முறை மூலமாக வெளிப்படுத்தினர். அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக கருப்பினத்தவர் பெற்ற உரிமைகளையும் சுதந்திரத்தையும் நடைமுறையில் பயன்படுத்த முடியாமல் தடுக்க முயற்சித்தனர். நீண்ட மேலங்கிகளும், கூர்த்தொப்பிகளையும் சீருடையாக அணிந்து கொண்டு, இரகசியமாகச் செயல்பட்டு சிலுவைகளை எரிப்பது, பிற சிறுபான்மை இனத்தவர் மீது வன்முறைப் பிரயோகம் மற்றும் கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் அமெரிக்க அரசால் கண்காணிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளால் இவர்கள் ஒடுக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தங்களை ஒருங்கினைத்துக்கொண்டு செயல்பட்டனர். வெள்ளையரல்லாத பிற இனத்தவர் மீது இன்றளவும் தங்கள் துவேசத்தை ஏதேனும் ஒரு வழியில் இந்த இயக்கத்தார் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

English

A loose confederation of white supremacist groups and secret societies comprising people who oppose the advancement of minority groups, including Jews, Roman Catholics, immigrants from other nations, and especially African Americans. This opposition is expressed through attempted intimidation and terrorism. The KKK formed after the Civil War to keep African Americans from exercising their newly won rights. Through burning crosses, wearing hoods and robes, and committing murder and assaults, the KKK accomplished some of their goals until federal troops all but eliminated them in the 1970s. New KKK groups, mostly independent, have emerged and declined, especially from 1915 to 1930 and again in the 1960s. In recent years, there has been a modest KKK resurgence, especially in areas that have experienced a large influx of nonwhite immigrants.