kwanzaa
குவான்சா
தமிழ் விளக்கம்
ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் தங்களுடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறுமுகமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 தொடங்கி ஜனவரி 1 வரை கொண்டாடும் மதச்சார்பற்ற விழா. இது பல ஆப்பிரிக்கா இனங்களின் அறுவடைத் திருவிழாக்களின் கலவை. இந்த சம்பிரதாயத்தின் வரலாறு அமெரிக்கக் கருப்பர் இன எழுச்சியோடும், கிறிதுமஸ் கொண்டாட்டங்களுக்கு மாற்றாகவும் தொடங்கி, பின் அனைத்துக் கறுப்பின மக்களும் கொண்டாடத்தக்க கலாச்சார விழாவாக வடிவெடுத்தது. ஆப்பிரிக்க கலாச்சாரத்தை மையப்படுத்திய இந்தக் கொண்டாட்டங்களுக்கு, 1965 ஆம் ஆண்டு மௌலானா கரீங்கா என்பவர் வித்திட்டார். KWANZAA என்ற வார்த்தையிலுள்ள ஏழு எழுத்துக்கள் ஏழு ஆப்பிரிக்க கலாச்சார விழுமியங்களைக் குறிக்கும். 1. ஒற்றுமையுடனிருத்தல் - unity, 2. சுயநிர்ணயம் - self-determination, 3. கூடிப் பணி செய்தல் - collective work, 4. பொருப்பெடுத்தல் - responsibility, 5. குறிக்கோளுடனிருத்தல் - purpose, 6.கூட்டுறவுப் பொருளாதாரம் - cooperative economies, 7. படைப்பாற்றலும் நம்பிக்கையும் - creativity and faith. இந்த விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் கைக்கொள்ள ஏழு மெழுகுவர்த்திகளை ஏற்றி அடையாளப்படுத்துகிறார்கள்.
English
An annual seven-day celebration in many African American homes held from December 26 to January 1. Originated by African American Maulana Karenga in 1965, the holiday is based on an amalgam of several African harvest festivals. Participating families light candles each day to remember seven basic principles: unity, self-determination, collective work and responsibility, purpose, cooperative economies, creativity, and faith.