kwashiorkor
குவாஷியோர்கர், புரதக்குறைப்பாட்டால் ஏற்படும் நோய், சவலைத்தனம்
தமிழ் விளக்கம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும், உலக சுகாதார அமைப்பின் (WHO) நிலைப்படியும், ஒரு தனிநபருக்கு ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் ஒரு கிராம் ஆகும். .57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. உணவில் புரதம் குறைந்தால் குவாஷியார்கர், மராசுமஸ் போன்ற குறைபாட்டு நோய்கள் தோன்றும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்பியிருக்கும். வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை குவாஷியார்கரின் அறிகுறிகள். மராஸ்மசில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். உடல் தசைகள் மெலியும். எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை, குச்சி போன்ற கை, கால்கள். மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
English
A disease of malnutrition caused by protein deficiency. It is found most commonly in Third World and Fourth World countries or impoverished areas where children receive too little milk or other protein foods. Growth retardation, anemia, abnormal distension of the abdomen, weakness, and apathy are major symptoms.