La Leche League

தாய்ப்பால் பரப்புரை சங்கம்

தமிழ் விளக்கம்

La Leche என்றால் ஸ்பானிய மொழியில் தாய்ப்பால் என்று பொருள். தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்த்த ஏழு (Marian Tompson, Mary White, Mary Ann Cahill, Edwina Froehlich, Mary Ann Kerwin, Viola Lennon, and Betty Wagner) இல்லினாய்ஸ் தாய்மார்களால், தாய்ப்பால் கொடுத்து குழந்தை வளர்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல, 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று 68 நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும், புட்டிப்பால் மற்றும் வியாபார ரீதியான குழந்தை உணவுகளுக்கு எதிராக சர்வதேச அளவில் இந்நிறுவனம் பரப்புரை செய்துவருகிறது.

English

An international advocacy and educational organization to encourage natural infant feeding and discourage widespread use of commercial baby formula.