labeling
அடைமொழியிடுதல், முத்திரையிடல்
தமிழ் விளக்கம்
ஒருவருடைய தோற்றம், பண்பு, நடத்தை அல்லது அவரின் பிரச்சனையை மையப்படுத்தி அவருக்கு அடைமொழி அளிப்பது. (எ.கா. குற்றவாளி, பாலியல் தொழிலாளி, மனநோயாளி, நொண்டி, செவிடு). மனிதர்களை அடைமொழியிடுவது அவர்களின் தனித்துவத்தை மறைத்து, பொதுமைப்படுத்தி அவர்களைப் பற்றிய ஒரு நிரந்தர மனபிம்பத்தை (stereotyping) அளித்துவிடுமாகையால், அடைமொழியிடுதல் கூடாது என்பது ஒருசாரார் கருத்து. வேறு சிலரோ அடைமொழிகள் மனிதர்களைப் பற்றிய தேவையற்ற விளக்கங்களைத் தவிர்த்து அவர்களை எளிதில் கையாள உதவுகிறது என்று கருதுகின்றனர்.
English
The application of a name to a person or a person's problem based on observed traits or patterns of behavior. Some social workers view labels (for example, such psychiatric diagnostic terms as passive-aggressive) as a form of name calling or generalization about people that leads toward stereotyping and away from individualization. Other social workers consider it a necessity to facilitate research and communication about a person's problem without having to include prolonged detailed descriptions. See also psychiatric labels and DSM-IV.