labeling theory
அடைமொழியிடல் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனிதர்களின் சுய அடையாளமும், நடத்தையும் சமூகம் அவர்களை எந்த அடைமொழி (பட்டப்பெயர்-முத்திரை குத்தல்) கொடுத்து அழைக்கின்றது என்பதைப் பொறுத்தே அமைகிறது என்பதை விளக்குவதே இக்கோட்பாடு. தங்களுக்கு வழங்கப்படும் அடைமொழிக்கேற்பவே மனிதர்கள் நடக்கத் தூண்டப்படுகிறார்கள் என்று இக்கோட்பாடு எடுத்துரைக்கிறது. பெரும்பான்மை இனத்தவரின் நடத்தைப் போக்குகளையோ அல்லது கலாச்சார நெறிகளைப் பின்பற்றாதவர்களையோ, அதிலிருந்து விலகியிருப்பவர்களையோ, அதற்கு எதிராகவோ மாற்றாகவோ நடந்துகொள்ளும் சிறுபான்மையினரை எதிர்மறையாகவோ, ஏளன அடைமொழி கொடுத்து முத்திரையிடுவது அவர்களை சமூக விலக்கம் செய்து, சிந்தனை ரீதியான வன்முறை பிரயோகித்து தங்கள் வழிக்குக் கொண்டுவர நிர்பந்திக்கும் முயற்சி என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது. இந்தக் கோட்பாட்டினடிப்படையில் ஏளன அடைமொழிகள் பல மாறின. எ.கா. விபச்சாரம் என்பது பாலியல் தொழிலாக, ஊனம் என்பது இயலாமையாக, மாற்றுத் திறனாக, அலிகள் திருநங்கைகளாக மாறி அந்த அடைமொழிகளிலிருக்கும் ஏளனத்தன்மை குறைந்தது. இருப்பினும் ஏதாவது ஒருவகையில் ஏளன அடைமொழியிடுவது தொடரவே செய்கிறது.
English
The hypothesis that when people are assigned a label, such as "paranoid schizophrenia," to indicate some kind of disorder or deviance, others tend to react to the subjects as though they were deviant. Also, the subjects may begin to act in a way that meets the others' expectations. This may be a type of self fulfilling prophecy and an example of the Hawthorne effect.