labile affect
முகுள வாதம், உணர்ச்சி நிலையின்மை, திடீர் உணர்நிலை மாற்றம்
தமிழ் விளக்கம்
நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும் நிலையற்ற உணர்வெழுச்சி. இந்தக் கோளாறுள்ளவர்கள் சாதாரண சம்பவங்களுக்குக் கூட மிகை உணர்வை வெளிப்படுத்துவார்கள். சாதாரண வருத்ததைக்கூட அடக்க முடியாமல் தேம்பி அழுது வெளிப்படுத்துவது, ஏமாற்றத்தின்போதோ, ஆத்திரமாக இருக்கும்போதோ அடக்கமுடியாமல் சிரிப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவர்.
English
Abrupt shifts and excessive variation in an individual's expression of affect.