labor force

தொழிலாளர் சக்தி / உழைக்கும் திறனுடையவர்கள்

தமிழ் விளக்கம்

தொழிலாளர் சக்தி என்பது பொதுவாக ஒரு நாட்டு மக்களின் நுகர்வுக்கும், பிற தேவைகளுக்குமான சந்தைப்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி அல்லது வினியோகம் செய்யும் தொழில் செய்யத் தகுதியான மக்கள் அனைவரையும் குறிப்பது. இது உழைக்கும் திறனுடைய அனைவரையும், வேலையிலிருப்பவர்கள் மற்றும் வேலையற்றவர்கள் (ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள், ஊனமுற்றவர்கள், குடும்பத்தைக் கவனித்துக்கொள்பவர்கள், வேலைசெய்ய விரும்பாதவர்கள் இந்த எண்ணிக்கையில் அடங்குவதில்லை) அனைவரையும் உள்ளடக்கியது. தொழிலாளர்களின் பங்கேற்பு வீதம் என்பது (labor force participation rate) வேலை செய்யத் தகுதியுடைய மக்கள் தொகையில், வேலையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.

English

The segments of a society that can or do produce all its marketable goods and services. The U.S. Bureau of the Cen sus includes in this definition employed and unemployed people. Those not in the labor force include some people who are retired, in school, raising families, disabled, "voluntarily idle," and others.