labor mobility

தொழிலாளர் இலகுவாக நகரும் தன்மை, தொழிலாளர் இடப்பெயர்ச்சி, தொழிலாளர்களின் இடம்பெயராற்றல்

தமிழ் விளக்கம்

தொழிலாளர்கள் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கும், ஒரு தொழிற்சாலையிலிருந்து இன்னொரு தொழிற்சாலைக்கும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும் எளிதாக நகர ஒரு சமூகத்தில் கிடைக்கும் வாய்ப்புகள். இப்படிப்பட்ட வாய்ப்புக்கள் அதிகமாயிருப்பின் அது அப்பொருளாதாரத்தின் திறனையும், முன்னேற்றத்தையும் குறிப்பதாகவும், அப்படி வாய்ப்பளிக்காத பொருளாதாரம் பின்தங்கியிருக்குமென்பது பொருளாதாரக் கணிப்பு.

English

The degree to which a society permits or encourages its workers to move from one job to another within the same employment organization, between organizations, and from one location to another. Economists generally believe that those societies with a relatively high level of labor mobility are likely to become more economically productive than those that are less flexible.