labor union
தொழிற்சங்கம், தொழிலாளர் சங்கம்
தமிழ் விளக்கம்
தொழிற்சங்கம் (trade union) என்றும் தொழிலாளர் சங்கம் (labour union) அழைக்கப்படும் அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையிலோ அல்லது நிறுவனத்திலோ கூலிக்காகவோ, சம்பளத்திற்காகவோ பணிபுரியும் தொழிலாளர்கள் அல்லது பணியாளர்கள், தங்களுடைய பொருளாதார நலன்களையும், பணிநிலைமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கங்கள் பரந்துபட்டது. தங்களது வேலையில் ஈடுபடுவோரிடையே ஒற்றுமையைப் பேணுதல், கூடுதல் ஆதாயம் பெற முயற்சித்தல் (சம்பளம், கூடுதல் பணிநேரக் கூலி, மருத்துவச் செலவுகள், ஓய்வுகால ஆதரவு போன்றவற்றில்), ஓர் பணியை முடிக்க போதுமான வேலையாட்களை அமர்த்த முதலாளிகளை வலியுறுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுதல், மேம்பட்ட பணியிடச் சூழலை ஏற்படுத்துதல் போன்ற பொது இலக்குகளை அடைவதற்காக ஒன்றுபட்ட தொழிலாளர்களின் அமைப்பாகும். தொழிற்சங்க அமைப்புகள் தங்கள் பிரதிநிதிகள் மூலம், முதலாளிகளிடமோ அவர்களின் பிரதிநிதிகளிடமோ பேச்சு வார்த்தை நடத்தி கூட்டு பேரம் மூலம் தொழிலாளர் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தொழிற்சங்கங்களின் முதன்மைக் குறிக்கோள் 'தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலைகளை காப்பாற்றிக் கொள்வதும் மேம்படுத்திக் கொள்வதுமாகும்'.இந்தக் குறிக்கோளில் ஊதியம், பணி விதிகள், முறையீடு செய்முறைகள், பணியெடுப்பு, பணிநீக்கம் மற்றும் பதவி உயர்வுக்கான விதிகள், பிற வசதிகள், பணியிடப் பாதுகாப்பு போன்ற நடமுறைகள் அடங்கும். பொருளாதார சிக்கல்களாலும், வர்க்க முரண்பாடுகளாலும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே உருவாகும் வர்க்க உணர்வினாலும் உந்தப்படும் தொழிலாளர்களால் எல்லா நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றுகின்றன. இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1918 இல் தோன்றிய சென்னைத் தொழிலாளர் சங்கம். தொழிலாளர்களின் தொடர்போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக்கொள்ள இந்திய தொழிற்சங்க சட்டம் வழிவகை செய்தது. (Trade Unions Act 1926). இந்தியாவில் செயல்படும் சில முக்கிய தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் இந்திய தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (INTUC) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு, இந்திய தொழிற் சங்க மையம் (CITU) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு, இரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (RMU) தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு, ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு (ULF), இந்து மஸ்தூர் சபா (HMS), பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) நடைமுறையில் தொழிற்சங்கங்கள் ஏதாவதொரு அரசியல் கட்சியை சார்ந்தே இயங்கும் நிலையிருப்பதால், அந்த அரசியல் கட்சியின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தொழிலாளர்களும் அவர்களுடைய அமைப்புகளும் ஒன்றுபட்டு இயங்கி தங்கள் பிரச்சனைகளை தீர்க்க இயலாமல் போகிறது.
English
An association, primarily of wage or salary earners and employees in a particular industry (such as government employees or automobile workers) or craft (plumbers or teachers), whose purpose is to advance the economic interests and working conditions of its members. Many social workers belong to labor unions such as the American Federation of State, County, and Municipal Employees (AFSCME), the American Federation of Government Employees (AFGE), and the Communications Workers of America (CWA).