labor welfare

தொழிலாளர் நலன்

தமிழ் விளக்கம்

ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனுக்குத் தடையாயிருக்கும் தனிப்பட்ட மற்றும் பணியிடச் சூழல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டபூர்வ நடைமுறைகள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் பொருளாதார முக்கியத்துவம் கருதி, சாதாரணக் குடிமக்களுக்குக் கிடைக்காத பிரத்யேகக் கவனம் தொழிலாளர்களின் மீது காட்டப்படுகிறது. அவர்களுக்கென்று சில வசதிகள் சலுகைகள் தரப்படுகின்றன. அமைப்பு சாராத் தொழிலாளர்களின் பொருளாதாரப் பங்களிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பெருகிவருவதால், அவர்களுக்கும் பயன்தரத் தக்க நடைமுறைகள் வகுக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படுகிறது.

English

Programs in industrial organizations to provide personnel and employment related social services. This is a term used in some Third World nations where social welfare services for the general public are limited, thus compelling some industries to provide such services for their employees.