Ladies Physiological Society

மகளிர் உடலியக்கவியல் சங்கம்

தமிழ் விளக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1840 காலகட்டத்தில், பாஸ்டன் நகரிலிருந்த பெண்மருத்துவரான ஹரியத் கீச கண்ட் என்ற பெண்மருத்துவரால், பெண்களின் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட, பெண் உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பினர் பெண்களின் உடலியக்கம், கர்ப்பம் தரித்தல், இயற்கைப் பிரசவம், குழந்தை வளர்ப்பு, ஊட்டச்சத்து, சுகாதாரப் பராமரிப்பில் மாற்றம் போன்ற பல விசயங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது இங்கிலாந்து நாட்டின் சமூகப்பணி முறையின் முன்னோடியான நட்பார்ந்த வருகையினரை (Friendly Visitors) முன்மாதிரியாகக் கொண்டது. பின்னாளில் இது அறக்கட்டளைச் (Charity Organization Societies (COSs) சங்கங்களாக மாறியது.

English

A 19 th century volunteer organization that focused on women's health interests, pregnancy, childbirth, natural childbirth, child rearing, nutrition, and health care reform. Volunteer women provided information and support to expectant mothers of all social classes and advocated for improvements in health care for them. The organization started in Boston in 1840 and was based on the model of England's friendly societies. Eventually the societies were merged into other organizations, especially the more comprehensive Charity Organization Societies (COSs).