lady bountiful
வள்ளன்மை நிறைந்த, வளந்தரும் சீமாட்டி, வரையாது வழங்கும் சீமாட்டி, தாராளமனம் கொண்ட பெண்மணி
தமிழ் விளக்கம்
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, ஆலோசனைகள் வழங்கிய மேல்தட்டுப் பெண்மணிகளின் செயலைக் குறிக்கவும், ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் தன்னுடைய வளமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் சாம்பல் நிற பட்டுக்காலுறை அணிந்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவைகளையும், பொருட்களையும் கொடுத்துதவிய சமூகப்பணியாளர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் கேலியாகக் குறிக்கவும் இச்சொல் பயன்படுதப்பட்டது. இப்படி அழைக்கப்பட்டவர்கள்தாம் நட்பார்ந்த வருகையினராகி, பின் சமூகப்பணியின் முன்னோடியானார்கள்.
English
A term once frequently applied, somewhat derisively, to social workers and volunteer workers who provided goods and services to those in need. The term originated during the U.S. Civil War when upper-class women donated and personally delivered food, clothing, and advice to those in need. Many of these women subsequently began working as friendly visitors, the precursors to professional social workers. See also "greystocking."