laissez-faire

தலையிடாமை, தலையிடா நெறி, அரசியற் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடு, தன்னிச்சை வணிகக் கொள்கை

தமிழ் விளக்கம்

பொருளாதாரம், சமூகநலன் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் அரசு தலையிடாதிருப்பதையும், அதிகாரப் பிரயோகம் தவிர்த்தலையும் சுட்டிக்காட்டும் சொல். மக்களின் நுகர்வுத் தேவைப் பூர்த்தியிலும், சமூகநலத் தேவைப் பூர்த்தியிலும் அரசு தலையிடாமல், அதை தனிநபர்களாகவோ, குழுக்களாகவோ, அரசுசாரா நிறுவனங்கள் மூலமோ பூர்த்தி செய்துகொள்ளும் சூழ்நிலையை அரசு உருவாக்கித் தரவேண்டுமென்று ஆடம் ஸ்மித் போன்ற பொருளாதார அறிஞர்கள் வற்புறுத்திய முதலாளித்துவக் கோட்பாடு.

English

1. In social policy, the idea that government should not interfere with any aspect of the economy and that individuals will provide all services and fulfill all needs by means of financial incentives. This is a relative concept, but in its literal form, it is the classic capitalistic model of society. 2. In social administration, the term refers to the management practice of minimal involvement. A laissez-faire leader would be inclined to let staff make most of their own decisions (compared to an autocratic leader who would make most of the organization's decisions).