LAN

உள்ளூர் பகுதி வலையமைப்பு, உள்ளமைப் பிணையம், அகப் பரப்புப் பிணையம்

தமிழ் விளக்கம்

LAN என்பது ஒரு எளிமையான கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆகும். இவ்வகை நெட்வொர்குகள் சிறிய பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைக்க பயன்படுகிறது. இந்த முறை பெரும்பாலும் ஒரு கட்டிடத்திற்குள் அல்லது ஒரு அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைக்கப் பயன்படுகிறது. LAN அமைப்பில் Printer, Server போன்று பல கருவிகளை மற்றும் application களைப் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.
LAN நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைப்பதற்கு ethernet cable, network adapter, hub, switch, router போன்றவைகள் பயன்படுகின்றன. LAN லினை நிர்வாகம் செய்வதற்கு எளிமையாக இருப்பதற்காக கம்ப்யூட்டர் இணைப்புகளைக் குழுக்களாகப் பிரித்து அமைத்து கொள்ளலாம். இந்த குழுக்கள் workgroup என்று அழைக்கப்படுகிறது. பல குழுக்கள் இருந்தால் இணைப்பதற்கு router என்ற கருவி பயன்படுத்தப்படும்.

English

Local area network, a connection of mainframe and personal computers within the same building or general area. See also WAN.