language disorder

மொழிக் கோளாறு, மொழி பயன்பாட்டுத் தடங்கல்

தமிழ் விளக்கம்

ஒருவருக்கு தனது தாய் மொழியைப் பயன்படுத்தித் தொடர்பு கொள்வதில் ஏற்படும் தடங்கல் அல்லது இயலாமை. இது வளர்ச்சிப்பருவ அறிதிறன் குறைபாட்டாலோ அல்லது உடல்ரீதியான இயலாமையாலோ ஏற்படலாம். அந்நிய மொழியைப் பேசுபவர்களுக்கு இது பொருந்தாது. இந்த இயலாமை மொழியைக் கற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலோ, கேட்கும் திறனழிந்திருந்தாலோ, அதிர்ச்சி, பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புக் கோளாறாலோ ஏற்படலாம். மொழி வளர்ச்சித் தடங்கல்கள் இருவகையாக வெளிப்படும். மொழியைப் புரிந்து கொள்ளமுடியா இயலாமையும், மொழியைப் பயன்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ள இயலாமையும் அல்லது இவ்விரண்டும் இணைந்தோ இருக்கலாம். இது இலக்கணப் புரிதலின்மை, வாக்கியங்களைத் தொடராக அமைக்க இயலாமை, வாக்கியக் கட்டமைப்பை உருவாக்க இயலாமை அல்லது வாக்கியத்தின் உட்பொருள் விளங்காமை (grammar, syntax morphology, semantics) போன்று பலவழிகளில் வெளிப்படும்

English

An inability to use language to communicate satisfactorily, caused by developmental, cognitive, or physical impairment. The term does not apply to people who have communication problems in areas where the languages are not in their native tongue. Language disorders include never having acquired any language (usually the result of mental retardation) and acquired disorders resulting from physical problems such as trauma, hearing disabilities, stroke, neurological disorder, and developmental language disorder. Developmental language disorders are of the expressive or receptive types and, more frequently, combinations of both. See expressive language disorder and mixed receptive-expressive language disorder.