Lassalle, Beatriz (1882-1965)

பியாட்ரீஸ் லாசாலே (1882-1965)

தமிழ் விளக்கம்

பியாட்ரீஸ் லாசாலே (1882-1965) - புட்ரோ ரீகோ நாட்டின் மிக முக்கியமான சமூகப்பணியாளர். நியூயார்க் சமூகப்பணிக் கல்லூரியில் படித்த இவர், கல்வியை முடித்துவிட்டு புட்ரோ ரீகோவின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகச் செயலராகப் பணியாற்றினார். அந்நாட்டில் முதல் சமூகப்பணித் துறையை ஏற்படுத்தினார் புட்ரோ ரீகோ நாட்டின் குழந்தைகள் மற்றும் குடும்பநலன், பார்வையற்றவர்கள் புனர்வாழ்வு போன்ற பல பணிகளை முன்னெடுத்துச் செய்தவர். அந்நாட்டின் பொருளாதார மந்தநிலையின் போது, அவசர காலப் புனரமைப்பு நிர்வாகத் தலைமைப் பொறுப்பிலிருந்தார். புட்ரோ ரீகோவில் சமூகப்பணியாளர் அங்கீகாரம் பெறவும், சான்றளிக்கப்படவும் இவர் செய்த முயற்சிகள் முக்கியமானது.

English

Social activist for suffrage and other rights for Puerto Ricans, she headed the Puerto Rico Emergency Reconstruction Administration during the Great Depression and led the successful campaign for Puerto Rico to be the first state or territory to have social work licensing.