latency stage

மொட்டவிழாப் பருவம

தமிழ் விளக்கம்

பிராய்டின் உளப்பாலியல் வளர்ச்சிக் கோட்பாட்டின்படி குறியின்பப் பருவமும், இனப்பெருக்க உறுப்புகள் செயல்படும் பருவமும் பல்வேறு வகையான உளச்சிக்கல்கள் மிகுந்தது. குறியின்பப் பருவத்தில் தாய் மகன் அன்புணர்வும் (oedipus complex), தந்தை மகள் அன்புறவும் (electra complex), அடக்கி ஆளும் இச்சை (Authority complex), தாயின் மீது இச்சை கொண்டால் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் (Castration complex), ஆண்களைப் போன்று ஆண்குறி இல்லையே என்ற பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தாழ்வு மனோபாவம் (Femininity complex) போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கபடுவர், இந்த உணர்வுக் குழப்பங்கள் தொடராமலும், புதிய குழப்பங்கள் உருவாகாமலும் அடுத்த பருவமான இனப்பெருக்க உருப்புக்கள் செயல்படும் நிலைக்கு நகரும் காலம். இந்தப் பருவத்துக் குழந்தைகள், சமூகத் திறனை வளர்த்துக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி அடுத்த நிலையான இனப்பபெருக்க நிலைக்குத் தேவையானா பாலின அடையாளங்களைச் சிறிது சிறிதாகப் பெரும் நிலை.

English

In the Freudian theory of psychosexual development, the stage of personality development in the child that follows the phallic (oedipal) phase and precedes the genital stage (adolescence). Sigmund Freud (1856-1939) viewed this as a time in which no new conflicts are introduced, but the child consolidates previous progress. Other analytic theorists, such as Harry Stack Sullivan (1892-1949) and Erik Erikson (1902-1994), saw this stage as important for the child's developing social skills and sexual identity. See also psychosexual development theory.