latent homosexual
உள்ளுறையும் தன்பாலின நாட்டம் / கவர்ச்சி
தமிழ் விளக்கம்
ஒரு ஆணோ, பெண்ணோ தன்னை இயல்பான எதிர்பாலின உணர்வுடையவர் என்று கருதினாலும், அவருடைய ஆழ்மனதில் தன்பாலினத்தவருடன் சிற்றின்ப விருப்பமுடையவாரக இருக்கும் உணர்வு. மறைந்திருக்கும் இந்த விருப்பம் அதீத மனவுளைச்சலை உருவாக்கி, அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தவே தன் உளச்சக்தி அனைத்தையும் செல்விடக் கோரும். தன்பாலின இச்சைகளை மறைக்கும் முகமாக ஓரினச் சேர்க்கையாளர்களின் மீது வெறுப்பும், அவர்களுடனான தொடர்புகளைத் தவிர்ப்பதும், எதிர்பாலினத்தவரின் இயல்பான நடத்தைகளை தவிர்ப்பதுமாக நடந்துகொள்ள ஆரம்பிப்பர்.
English
A term sometimes applied to an individual who believes himself or herself to have a heterosexual orientation but who has unconscious desires for erotic gratification with members of the same sex. Latent homosexuals may be in deep conflict about their sexual orientation and expend great psychic energy in denying to themselves and others that such conflicts exist. Such denial might take the form of overt hostility toward people who are gay or lesbian, avoidance of them, or avoidance of any behaviors that seem more appropriate for members of the opposite sex. See also homosexuality, latent; homosexuality; and homophobia.