Latino
லத்தீன் வம்சாவளியினர்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலிருக்கும் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் வம்சாவளியினரைக் குறிக்கும் சொல். இவர்கள் மெக்சிகோ, புட்ரோ ரீகோ, கியூபா, மத்திய மற்றும் தெனஅமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த ஸ்பானிய மொழிபேசும் இனத்தவர். மொழி தவிர்த்து, பிற வகையில் இவர்கள் ஒருமித்த கலாச்சாரக்கூறு கொண்டவர்கள் அல்ல. இந்த இன ஆண்களை லட்டினோ (latino) என்றும் பெண்களை லட்டின (latina) என்றும் அழைப்பார்கள்.
English
One who identifies or is identified with the languages and certain cultural characteristics of the people of South America, Central America, and the Caribbean. There is considerable diversity among the groups who fit under the Latino rubric.