law
சட்டம்
தமிழ் விளக்கம்
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்பு முறையால், அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும். சட்டத்தின் தோற்றம் மனிதகுலத்தின் தொன்மைச் சமூக வாழ்க்கைக் காலத்தின் தோற்றத்தோடு தொடர்புடையதாகும். சமூகமாகத் திரண்ட மனிதர்களிடம் ஏற்பட்ட வகுப்பு வேறுபாட்டால் தோன்றிய அரசு எனும் நிறுவனத்தின் தோற்றத்தோடு சட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும், அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்தின் இரு முதன்மைக் கூறுகளாகும். இதன்படி அரசின் தோற்றக்காலமே சட்டத்தின் தோற்றக்காலமாக இருந்திருக்கக் கூடியதாகும்.
English
A system of rules and legislative pronouncements established and recognized by a state, nation, tribe, society, or community as binding to its members.