Law of Settlement and Removal

குடியிருப்பு நிர்ணயம் மற்றும் அகற்றுதல் சட்டம்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு திருச்சபைப் பகுதியிலும் உள்ள வறியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்யக் கொண்டு வரப்பட்ட நடைமுறையின்படி, வறியவர்களின் எண்ணிக்கை மற்றும் நிவாரணச் செலவுகளுக்கு ஏற்ப, திருச்சபைப் பகுதியில் வாழ்பவர்கள் / இருப்பவர்கள் வரிசெலுத்த வேண்டும். வறுமையிலிருக்கும் ஒருவர், ஒரு திருச்சபையைச் சேராதவர் என்று அடையாளம் காணப்படும் போது, அவரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றவும் இந்தச் சட்டம் வழிவகை செய்தது.

English

The historically significant English statute, enacted in 1662, that led to the widespread use of residency laws in determining eligibility for public assistance. Under this law, municipal employees were authorized to help only poor citizens and to expel from their jurisdictions anyone who might become dependent on assistance.