LBW baby
குறைந்த எடைக் குழந்தை, எடை குறைந்த குழந்தை
தமிழ் விளக்கம்
பிறக்கும் குழந்தையின் எடை 2500 கிராமிலிருந்து 4200 கிராம் இருக்கவேண்டும். பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் கீழிருந்தால் குறைந்த எடைக் குழந்தை என்றும், அதற்கும் கீழே இருந்தால் மிகுகுறை எடைக் குழந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இக்குழந்தைகள் பலவிதமான தொற்று நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பிருப்பதால், சிசு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிசு மரணத்திற்குள்ளாகும் குழந்தைகளில், 15.5 சதவீதக் குழந்தைகள், குறைஎடை காரணமாகவே மரிக்கின்றது. உலகம் முழுக்க 2 கோடிக் குழந்தைகள் குறை எடையுடன் பிறக்கின்றன. இவர்களில், 95.5 சாதவீதம் வளரும் நாடுகளில் பிறக்கின்றார்கள். குறை எடை, குறைப் பிரசவத்தினாலோ, கருவளர் காலம் முடிவதற்குள் குழந்தை பிறந்தாலோ, இளவயதில் கர்ப்பம் தரித்தாலோ, கர்ப்பிணிப் பெண்கள் போதுமான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளாமையாலோ, அதிக இரத்த அழுத்தத்தாலோ, அதிக முறை கர்ப்பம் தரித்ததாலோ ஏற்படலாம்.
English
See low-birthweight (LBW) baby.