lead poisoning

காரீய நச்சு

தமிழ் விளக்கம்

இது கடுங்கரி (graphite) அல்லது காரீயம் அல்லது பென்சில் கரி அல்லது கருவங்கம் என அறியப்படும் கனிமம். காரீயம் ஒரு மிருதுவான நீல நிறமுள்ள தனிமம் (உலோகம்). இது குழாய்கள், வர்ணக்கலவைகள் இவற்றில் சேர்க்கப்படுகிறது. காரீயம் அளவு குழந்தைகளுக்கு மிக அபாயகரமானது. எலும்புகள் சரிவர வளராமல் தடுக்க கூடியதும், விஷமாகிக் கொல்லக்கூடிய தன்மையும் கொண்டது. அமெரிக்காவில் கிட்டதட்ட 500,000 குழந்தைகள் இரத்தத்தில் காரீயம் அளவு அதிகமாக இருக்கிறது. இது தீர்க்க முடியாத விளைவுகளைத் தரலாம். காரீயம் உட்கொள்ளும் குழந்தையின் இரத்தத்தில் சிகப்பணுக்கள் உற்பத்தி குறைகிறது. மூளை வளர்ச்சியைக் காரீயமே தடை செய்கிறது. தசைகளின் வலுவைக் குறைத்து இரத்த சோகையும் ஏற்படுத்துகிறது. மிகக் குறைந்த நேரத்தில் விரல்கள், கை கால்களில் உள்ள மூட்டுக்களைப் பாதித்து நோய்வாய்ப்பட வைக்கும். சிறுவர்களின் நினைவுத் திறனும் பாதிக்கப்படுகிறது. ஆண் குழந்தைகள் காரீயம் உட்கொண்டால் மலட்டுத் தன்மை வரவும் வாய்ப்பிருக்கிறது.

English

The absorption of quantities of lead, sometimes resulting in brain damage, respiratory illness, other health problems, or death in the affected individual. The lead may come from such sources as lead-based paint or the exhaust of automobiles that burn leaded gas. The population at greatest risk for lead poisoning is young children who live in older buildings in which lead-based paints were used. They may ingest paint chips or breathe lead residue. Another at-risk population includes people in highly congested cities where automobile exhaust may contain high levels of lead.