League of Red Cross Societies

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் சம்மேளனம் / கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், 1863 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டது. 160 நாடுகளில் செயல்பட்டுவந்த (தற்போது 183 நாடுகள்) செஞ்சிலுவைச் சங்கங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, 1919 ஆம் ஆண்டு ஹென்றி டேவிசன் என்பவரால் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவானது. செஞ்சிலுவைச் சங்கங்களின் நிவாரணப் பணிகளுக்கான நிதி திரட்டுவது, நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பது, விநியோகிப்பது, பேரிடர் காலங்களிலும், போர்க்காலங்களிலும் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவது, நிவாரணப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை இந்தக் கூட்டமைப்பு சம்மேளனம் செய்து வருகிறது.

English

An organization founded in 1919 comprising 60 national Red Cross societies to coordinate disaster relief activities by member societies, including raising funds, procuring emergency provisions, distributing resources to populations experiencing natural or human made disasters, and training relief workers.