League of Women Voters

பெண் வாக்காளர்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய (Women Suffrage Association) அமைப்பின் கிளையாக, பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தபின் அதைப்பற்றிய விழிப்புணர்வுக் கல்வியை உருவாக்கத் தோன்றியது பெண்கள் வாக்குரிமைக்கான கூட்டமைப்பு. அரசின் அமைப்பு, அரசியல் செயல்பாடு, ஜனநாயக வழிமுறைகள் பற்றி தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் ஆய்வு செய்யவும், அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, 1974 ஆண் வாக்காளர்களையும் உறுப்பினராக அனுமதித்தது.

English

A voluntary organization established in 1920 to educate citizens about the political process and to scrutinize and conduct research on the electoral process and government structure at the national, state, and local levels. An outgrowth of the Woman Suffrage Association, the league originally sought to educate women in the rational use of their newly acquired right to vote. The league, which opened its membership to men in 1974, has chapters in most cities in the United States. See also suffrage and women's suffrage movement.