learning curve

கற்றல் நிகழ்வு வரைபடம்

தமிழ் விளக்கம்

புதிதாக ஒன்றைக் கற்பவர் எந்த வேகத்தில் கற்றுக்கொள்கிறார் என்பதை அறிய உதவும் வரைபடம். இந்த வளைவு செங்குத்தாக மேலேறினால் கற்றல் வேகமாக, எளிதானதாக இருக்குமென்பதையும், அது கிடைமட்டமாக இருக்கும் போது கற்றல் மெதுவாகவும் கடினமாகவும் இருக்குமென்பதையும் குறிக்கின்றது. எந்த மாதிரியாகப் பயிற்றுவித்தால் கற்றல் எளிதாக, வேகமானதாக சிக்கனமாக இருக்கும் என்பதை அறிய, இதைக் கல்வி நிலையங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்துகின்றார்கள். இந்த முறையில், கற்றல் திறனை அறிய அறிமுகப்படுத்தியவர் தியோடர் பால் ரைட் (Theodore Paul Wright (1895 – 1970) என்பவர்.

English

A graphic representation of the amount and frequency with which skill or information is acquired; usually the horizontal axis indicates time, and the vertical axis indicates the activity learned, the skill demonstrated, or the errors involved.