learning disability

கற்றல் குறைபாடு / இயலாமை, கற்றலுக்கான ஆற்றலின்மை

தமிழ் விளக்கம்

சொற்பொருள் காணவியலாத மூளைக் கோளாறால், படிப்பிலும் எழுத்துக் கூட்டலிலும் ஏற்படுகிற இடர். உடல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதிருந்தும், பிற குழந்தைகளுக்கினையான திறன் பெற்றிருந்தும் கற்பதில் பின்தங்கும் அல்லது சிரமப்படும் குழந்தைகள். இது பலவகையில் வெளிப்படும். 1. எழுத்து மயக்கம், புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (Dyslexia, டிஸ்லெக்சியா) என்பது மொழியோடு சம்பந்தப்பட்ட ஊனம் 2. எழுதவியலாமை, எழுத்துணர்த்தாமை, மூளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல் - எழுத்துச் சார்ந்த/ எழுத்துத்திறன் சார்ந்த கற்றல் குறைபாடு (Dysgraphia) - 3. கணிதப் பாடத்தைப் புரிந்து கொள்வதில் இருக்கும் கற்றல் குறைபாடு - கணிதப் பாடத்தைக் கற்பதில் குறைபாடு (Dyscalculia).

English

A descriptive term for children of normal or above-average intelligence who experience a specific difficulty in school, such as dyslexia (reading difficulty), dysgraphia (writing difficulty), or dyscalculia (math or calculation difficulty).