learning style
அறிவைப் பெறுவதிலும், தகவல்களைக் கையாள்வதிலும் ஒருவர் பின்பற்றும் முறை
தமிழ் விளக்கம்
ஒவ்வொருவரும் அவரவருக்கு உரித்தான பாணியைக் கையாண்டு கற்றுக்கொள்கிறார்கள். சிலர் செவிவழியாகவும், சிலர் பார்வையிடல் வழியாகவும், சிலர் படங்கள், காணொளி மூலம் காட்சிப்படுத்தல் வழியாகவும், சிலர் படிப்பதன் மூலமாகவும், சிலர் உரையாடுவதன் மூலமாகவும், சிலர் பரிசோதனையிலீடுபட்டு செய்து பார்த்தும் கற்றுக்கொள்ளும் தன்மையைக் குறிக்கும் சொல்.
English
The predominant way one acquires knowledge and processes information. Each person is said to have a unique learning style: Some learn best through reading, whereas others do better when information is transmitted orally; some learners do better through the use of pictorials and video, whereas others prefer language, discussion, and personal interaction.