learning theory

கற்றல் கோட்பாடு

தமிழ் விளக்கம்

கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் ஆகும். இதன்போது வேறுபட்ட தகவல்களின் உருவாக்கமானது நடைபெறுகின்றது. கற்கும் திறனானது மனிதர்களிலும், விலங்குகளிலும், சில வகை இயந்திரங்களிலும் காணப்படுகின்றது. கற்றல் என்பதற்குச் சில சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இது காலத்துடன் மாற்றமடைந்து செல்லும். அத்துடன் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உடனடியாக பெறப்படும் விளைவும் அல்ல. இது சூழ்நிலைகளினால் வடிவமைக்கப்படக் கூடியது. அதாவது சூழ்நிலை சார்ந்தது. கற்றலானது ஏற்கனவே பெற்ற அறிவில் தங்கிக் காணப்படுகின்றது. இது நாம் பெற்ற அறிவின் திரட்டு என்பதைக் காட்டிலும், இது படிப்படியாக சேரும் படிமுறை சார்ந்த வளர்ச்சி என்பதே பொருத்தமானதாகும். கற்றலானது கற்பவரை மாற்றமடையச் செய்து, அந்த மாற்றங்களை நிரந்தரமானவையாக்கும். மனிதனின் கற்றலானது கல்வி, சுயமுன்னேற்றம், பாடசாலை, பயிற்சிகள் என்பவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு இலக்கை நோக்கியதாகவும் ஊக்கப்படுத்தலினால் அதிகரிப்பதாகவும், வலுவடைவதாகவும் அறியப்பட்டுள்ளது.

English

Behaviorism and social learning theory, the concepts that underlie behavior therapy and behavior modification; the concept that human behaviors result from finding success or failure with certain responses to various environmental stimuli.