Leboyer method

லாபியர் (பிரசவ) முறை

தமிழ் விளக்கம்

பிரடெரிக் லாபியர் என்னும் மருத்துவரால் உருவாக்கப்பட்ட வன்முறையற்ற வகையில் பிரசவம் பார்க்கும் முறை. இது இயற்கையான பிரசவ முறை என்று கருதப்படுகிறது. பிரசவத்தின் போது சிசுக்கள் எதிர்கொள்ளும் உணர்வதிர்ச்சிகளைக் குறைக்க, அதிக வெளிச்சமற்ற மங்கலானா அறைச் சூழலில் பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை வெதுவெதுப்பான நீரில் முக்கியெடுத்து, தாயிடமிருந்து குழந்தையைப் பிரிக்காமல் தாயின் வயிற்றுப் பகுதியோடு குழந்தையை அணைவாகப் படுக்கவைத்தும் செய்யும் நடைமுறைகள். மற்ற மருத்துவர்கள் செய்வது மாதிரி குழந்தையின் புட்டத்தில் தட்டியும், குழந்தையைத் தலைகீழாகத் தூக்கி ஆட்டும் முறைகள் இதில் கையாளப்படுவதில்லை.

English

A system designed to minimize the infant's birth trauma by maintaining a quiet postdelivery environment in a dimly lit room and by placing the newborn on the mother's abdomen with the umbilical cord intact. Physicians do not spank or hold the infant upside down.