left-brain thinker

இடது மூளைச் சிந்தனையாளர்

தமிழ் விளக்கம்

மனித மூளை வலது, இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) அமைந்துள்ளது. இடது பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும்போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளைப் பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களைப் பகுக்கும்போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Mind, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம். இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களைக் கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது. ஸ்டெப் பை ஸ்டெப் அல்லது பாயிண்ட் பை பாயிண்ட் என்பது இடதுபக்க மூளைக்காரர்களுக்கே பழக்கமான ஒன்று. வலது பக்கத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்குத் தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. வலதுபக்க மூளைக்காரர்கள் கற்பதே சித்திரங்கள் மூலமாகத் தான். அவர்கள் பொதுவாக எதையும் மனப்பாடம் செய்வதில்லை. சித்திரங்களாகவே அனைத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டு வேண்டும்போது தேவையான உண்மைகளை மனதில் திரும்பப் பெறுவார்கள்.

English

A term applied to people who are supposed to rely more on the left hemisphere of their brains the apparent origin of linear thoughts and adherence to formal rules of logic-scientifically and systematically, as opposed to the "right brain thinker," who is supposedly more creative, artistic, intuitive, and emotive.